Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  08-01-2021

இன்றைய தியானம்(Tamil)  08-01-2021

நான்தான் 

“தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.” – சங்கீதம் 19:12 

சார்லஸ் ஸ்பர்ஜன் ஒருமுறை அடிமைக் கைதிகள் பிரயாணம் செய்யும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த அனைவரிடமும் சகஜமாக பேசிக்கொண்டு, ஒரு பொதுவான கேள்வியைக் கேட்டார். “நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்?” என்பதே. அநேகர் தங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம் மற்றவர்களே என்றனர். சிலர் சூழ்நிலையைக் காரணம் காட்டினர். ஒருவர் மாத்திரம், “என்னுடைய பண ஆசையே என்னைத் திருடச் செய்தது. என்னுடைய நிலைக்கு நானே காரணம்” என்று கூறினார். உடனே ஸ்பர்ஜன் அவரது தோளைத் தட்டி தேவன் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். நீ அவருக்கு தூரமானவனல்ல என்று கூறி உற்சாகப்படுத்தினார். இதை கவனித்துக் கொண்டிருந்த காவல் அதிகாரி ஸ்பர்ஜன் இறங்கும் துறைமுகத்தில் அந்த நபரையும் இறக்கிவிட்டார். சில நாட்களில் அவர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு தீவிர ஆத்தும ஆதாயகராக மாறினார். 

பொதுவாக நாம் யாவரும் நம் தவறுகளை ஒத்துக்கொள்வதில்லை. ஏதேதோ காரணங்களைச் சொல்லி நம்மை நிரபராதிகளாகவே நிரூபிப்போம். இது ஆதாம்-ஏவாள் தொடங்கி இன்று வரை தொடரும் நிகழ்வுதான். ஆனால் எவனொருவன் தன் தவறுகளை உணர்ந்து கொள்கிறானோ அவனை ஆண்டவர் நிச்சயம் அங்கீகரிப்பார். தாவீதின் வாழ்வே இதற்கு சிறந்த உதாரணம். தாவீது உரியாவின் மனைவியினிடத்தில் பாவத்தில் விழுந்தது, உரியாவை கொலை செய்தது எல்லாம் உண்மைதான். ஆனால் தேவன் தீர்க்கதரிசியை அனுப்பி, குற்றத்தை சுட்டிக் காட்டியவுடன் தாவீது தன்னுடைய ராஜ ஸ்தானத்தை வைத்து குற்றத்தை மூடி மறைக்கவோ, உரியாவின் மரணத்திற்கு வேறு பல காரணங்கள் காட்டவோ எண்ணாமல் தவறை ஒத்துக்கொண்டு 51ம் சங்கீதத்தை எழுதினார். இச்சங்கீதத்தை வாசிக்கும் போது அவர் மேல் நமக்கு மதிப்பு கூடுகிறதேயன்றி குறையவில்லை. தாவீது எழுதின சங்கீதத்தை எல்லாம் “பரிசுத்த” வேதாகமத்தில் இணைப்பதா என தேவன் எண்ணவில்லை. ஆம், தன் பிழைகளை உணரும் மனிதனின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவந்து அவனை பயன்படுத்துவது தேவனுக்கு மிக மிக எளிது. 

நண்பர்களே! தேவன் உங்களுடன் இடைபடுகிறார். உங்களுடைய தவறுகளுக்கு சூழ்நிலைகளை காரணம் காட்டி, குறைவுகளை சரிப்படுத்த மனமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களோ? வேத வசனங்கள் மூலமாகவோ பிரசங்கத்தின் மூலமாகவோ தேவன் நம்மோடு பேசும் போது கீழ்ப்படிந்து காரியங்களை சரி செய்வோம். தன் தவறுகளை உணருகிறவர்களை தேவன் ஆசீர்வதித்து ஏற்றுக்கொள்ள தவறவே மாட்டார். ஆம், ஆவிக்குரிய வாழ்வு வளர வேண்டுமானால், முன்னேற வேண்டுமானால் சுயநீதியை தூக்கி எறிந்து நம் நிலையை உணருவோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.
-    L. அழகர்சாமி 

ஜெபக்குறிப்பு:
ஜனவரி 2021-ல் இராக்லாந்து பைபிள் காலேஜ் 6th Batch ஆரம்பிக்க உள்ளது. புதிய மாணவர்கள் அநேகர் வாஞ்சையுடன் இணைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)